கந்தகம் கடித்து குதறிய நினைவுகள்!!

You are currently viewing கந்தகம் கடித்து குதறிய நினைவுகள்!!
தணியாத தாகம்…….
கந்தகம் கடித்து குதறிய நினைவுகள்
நெஞ்சை இடித்து நீள்கிறது!
வெந்து தணிந்த போரிலே
சொந்தங்கள் புதைந்து போயினர் ஊரிலே!
எங்கள் மண்ணிலே எங்கள் அரசிலே எத்தனை திளைப்பில் இருந்தனர்!
சொந்தக் காலிலே சுகமான காற்றிலே
இதமாக வாழ்ந்தனர்!
அடக்குமுறை கரங்கள்
தொண்டையை நெருங்கும் போதெல்லாம் முடக்கி வீசினர்!
வீரத்தின் விளை நிலமாய் இருந்தது எங்கள் நிலம்!
விடுதலையின் தீப்பொறியாய் எரிந்தது எங்கள் களம்!
கூவும் குயிலும் பாடும் மயிலும் ஓடும் மீன்களும் ஆடும் மரங்களும் கூடு குலையாது
குதூகலமாய் நின்றன!
ஆரத் தழுவும் ஆனந்தமாய் ஆர்ப்பரித்து நின்றது
தாய்மண்!
ஆனால்
ஊழிகளாலும்
ஊதும் குழல்களாலும்
அழிக்கப்பட்டோம்!
ஆனாலும்
வலிசுமந்த மாதத்திற்கு
வலிமையுண்டு!
தலைவனின் முடிவில்
தீர்கதரிசனமுண்டு!
விலைமதிக்க முடியா
விதைகளின் உதிரத்தில்
உண்மையுண்டு!
சதைசதையாய் நீ கிழித்தவரின்
கனவுகளில் கனதியுண்டு!
இனவாத அரசில்
நிலைக்காது!
தமிழரின் தணியாத தாகம்
அடங்காது!
✍️தூயவன்
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments