கனடாவுக்கு சிறீலங்கா கண்டனம்!

You are currently viewing கனடாவுக்கு சிறீலங்கா கண்டனம்!

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச உட்பட தமிழின அழிப்பாளிகளுக்கு எதிராக தடைகளை விதிக்க கனடா எடுத்துள்ள தீர்மானத்திற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று காலை கனேடிய உயர்ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து உத்தியோகபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட நால்வருக்கும் கனடாவில் குடியேற்றவோ அல்லது அகதிகள் பாதுகாப்போ கிடைக்காது என கனேடிய அரசாங்கம் நேற்று அறிவித்தது.

மேலும் அவர்களால் கனடா அல்லது அதன் குடிமக்களுடன் எந்த வியாபாரத்திலும் ஈடுபட முடியாது.

கனடாவில் அவர்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஏதும் இருந்தால் அவை தடை செய்யப்படும் என்றும் கனேடிய அரசாங்கம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments