கன்னியா வெந்நீரூற்றுகளை அபகரித்த தொல்பொருள் திணைக்களம்!

You are currently viewing கன்னியா வெந்நீரூற்றுகளை அபகரித்த தொல்பொருள் திணைக்களம்!

இராவணன் தன் தாயின் இறுதி கிரிகைகளுக்காக தனது வாள் கொண்டு உருவாக்கியதாக இலக்கியங்களில் சொல்லப்படும் திருகோணமலை கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீர் ஊற்றுகளும், தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளது.

கன்னியா ஏழு வெந்நீர் ஊற்று கிணறுகளை பார்வையிட வருவோரிடம் இருந்து கட்டணம் அறவிடப்படுகின்றது. அதற்காக கட்டணச்சீட்டும் விநியோகிக்கப்படுகின்றது. வருமான முகாமை மற்றும் பராமரிப்பு என்பன பெளத்த அடையாளம் இருப்பதாக சொல்லப்பட்டு தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

விநியோகிக்கப்படும் கட்டணச்சீட்டில், இது அநுராதபுர காலத்தில் பயன்படுத்தியதாகவும், தொல்லியல் சான்றுகளால் நிரூபிக்கப்பட்ட பௌத்த மத வளாகத்தில் இது அமைந்திருக்கிறது என்றும் ​குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கன்னியா வெந்நீரூற்றுகளை அபகரித்த தொல்பொருள் திணைக்களம்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments