கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி!!

You are currently viewing கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி!!
தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் இன்று (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் சில சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

கிடைக்கப்பெற்ற தகவலின் படி, பஹல்காமில் உள்ள சாலைக்கு அப்பாற்பட்ட புல்வெளியான பைசரன் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

“பைசரானில் சுற்றுலாப் பயணிகள் மீது இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எங்கள் அறிக்கைகள் கூறுகின்றன” என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

பைசரன் பகுதிக்கு கால் நடையாக மட்டுமே செல்ல முடியும். இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். சுற்றுலாப் பருவத்தில் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.

தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீஸ் குழு, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு காயமடைந்த சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியிலும், தாக்குதல் நடத்தியவர்களை கண்டறியும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply