காடுகள் கையளிப்பு தீர்மானம் எல்லை கற்களை நாட்டமுடியாது!

காடுகள் கையளிப்பு தீர்மானம் எல்லை கற்களை நாட்டமுடியாது!

2001ஆம் ஆண்டுக்கு முதல் பிரதேச செயலாளர்களின் பொறுப்பில் இருந்த அனைத்து காடுகளும் மீண்டும் கையளிக்கபட வேண்டுமென்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை உடன் நடைமுறைப்படுத்துமாறு, சகல மாகாண காணி ஆணையாளர்களுக்கும் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே, ஆளுநர் மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், உத்தியோகபூர்வமாக அந்தக் காணிகளை வனவளத் திணைக்களத்திடம் இருந்து மீளப்பெற்றுக்கொள்ளுமாறும், ஆளுநரால், இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை உடனடியாக செய்யவேண்டுமெனவும், இந்த நடவடிக்கை முடிவுறுத்தப்படும் வரை, வனவளத் திணைக்களம் எல்லைக் கற்கள் இடும்; நடவடிக்கையை நிறுத்த வேண்டுமெனவும், ஆளுநர் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள