காணாமல்போன பிள்ளையை தாருங்கள்! இழப்பீடு தேவையில்லை – தாயின் கண்ணீர்

You are currently viewing காணாமல்போன பிள்ளையை தாருங்கள்! இழப்பீடு தேவையில்லை – தாயின் கண்ணீர்

2006ம் ஆண்டு யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள கடையொன்றில் வேலை செய்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையே வேண்டும். இழப்பீடு வேண்டாம். என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்பாக கூறியுள்ளார். 

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வு நேற்றய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த தாய் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், திருநெல்வேலி கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் எனது மகன் காணாமல் போயிருந்தார். எனது மகனை மீட்டுத் தருமாறு பல்வேறு தரப்பினரிடம் கேட்டேன். 

எனது உடல்நிலை மாத்திரையின்றி இயங்காத நிலையில் தினமும் மாத்திரைகளை உற்கொண்டே எனது அன்றாடக் கடமைகளை மேற்கொண்டு வருகிறேன். எனக்கு இழப்பீடு வேண்டாம் எனது பிள்ளையை மீட்டுத் தாருங்கள். 

என ஆணைக்குழுவிடம் உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments