கால்பந்து சங்கம் : அனைத்து கால்பந்து மைதானங்களும் மூடப்படவேண்டும்!

You are currently viewing கால்பந்து சங்கம் : அனைத்து கால்பந்து மைதானங்களும் மூடப்படவேண்டும்!

அனைத்து கால்பந்து விளையாட்டுக்களும் ஏப்ரல் 15 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கழகங்கள், வீரர்கள் மற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன, மேலும் அனைத்து ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சிகளும் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தோற்றால் நோர்வேயில் கால்பந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல கால்பந்து மைதானங்களில், விதிகளை மீறும் வகையில், அக்கறையற்ற செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆதலால், இப்போது அனைத்து மைதானங்களும் மூடப்படவேண்டும் என்று நோர்வேயின் கால்பந்து சங்கம் விரும்புகின்றது.

ஆகவே, சுகாதார அமைச்சு (Helsedirektoratet) அனைத்து விளையாட்டு நடவடிக்கைகளையும் (உட்புற மற்றும் வெளிப்புற) , நிகழ்வுகளையும் தடைசெய்து மூட முடிவுசெய்துள்ளது.

பகிர்ந்துகொள்ள