காஸாவினுள் போதுமான அளவிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென பாப்பரசர் பதினான்காம் லியோ வலியுறுத்தியுள்ளார்.
வத்திக்கான் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை மதகுருவுமான பாப்பரசர் பதினான்காம் லியோ, புனித பீட்டர் சதுக்கத்தில் தனது முதல் வார உரையை மக்களிடம் ஆற்றினார்.
இதன்போதே போரில் பாதிக்கப்பட்ட காஸாவினுள் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல் விதித்துள்ள தடை விலக்கப்பட்டு அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இத்துடன், காஸா பகுதியின் நிலைமை மிகவும் வருத்தமளிப்பதுடன், வலி மிகுந்ததாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்