கிளிநொச்சி – அறிவியல்நகரில் துப்பாக்கிகள் ரவைகள் மீட்பு!

கிளிநொச்சி – அறிவியல்நகரில் துப்பாக்கிகள் ரவைகள் மீட்பு!

கிளிநொச்சி – அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் இருந்து பயன்படுத்த முடியாத நிலையிலான ரி56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் என்பன விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் பெய்த மழையினால் அவை வெளியே வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் தகவலறிந்த விசேட அதிரடிப்படையினர் அவற்றை இன்று (21) மீட்டுள்ளனர்.

இதன்போது ரி56 ரக துப்பாக்கிகள் ஐந்தும் ரவைகள் 30 மீட்கப்பட்டுள்ளன. இவை, விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என விசேட அதிரடிப்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

பகிர்ந்துகொள்ள