கொரோனாவால் மேலும் ஒன்பது பேர் மரணம், உயிரிழப்பு 83ஆக அதிகரிப்பு!

You are currently viewing கொரோனாவால் மேலும் ஒன்பது பேர் மரணம், உயிரிழப்பு 83ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று (21) மட்டும் ஒன்பது பேர் மரணித்தனர். அதிலொருவர் வெள்ளவத்தையைச் சேர்ந்தவர் ஆவார்.

வௌ்ளவத்தையைச் ​சேர்ந்த 76 வயதான ​ஆணொருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து, கொவிட்-19 தொற்றாளர் என இனங்காணப்பட்ட அவர், முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு மரணமடைந்துவிட்டார்.

கொவிட்-19 நிமோனியாவுடன் பக்றீரியாவும் தொற்றிக்கொண்டது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் மரணமடைந்துள்ளார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள