கொரோனாவுக்கு பலியான பிரபல தமிழ் நடிகர்!!

You are currently viewing கொரோனாவுக்கு பலியான பிரபல தமிழ் நடிகர்!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இதனையே கொரோனா வைரஸால் மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள், காவல் துறையினர், அரசியல்வாதிகள் என பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் வெங்கட் சுபா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். டிவி தொடர்களில் நடித்து வந்த வெங்கட் சுபா, டூரிங் டாக்கிஸ் என்ற யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்து வந்தார். தயாரிப்பாளராக இருந்த இவர் மொழி, கண்ட நால் முதல், அழகிய தீயே உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments