கொரோனா இந்தியா : பாதிப்பு எண்ணிக்கை 18,601 ஆக உயர்வு!

கொரோனா இந்தியா : பாதிப்பு எண்ணிக்கை 18,601 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இப்பொழுது, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,601 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், கொரோனா தோற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 543 ஆக அதிகரித்து ம் . 2,547 பேர் குணமடைந்தும், 14,175 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என வும் தெரிவித் திருந்தது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,265 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 590 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 3,251 பேர் குணமடைந்தும், 14,759 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,601 ஆக உயர்வடைந்து உள்ளது. நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை 232 பேர் பலியாகி உள்ளனர். 572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments