கொரோனா தாக்கம் ; அமெரிக்கர்களை பாதுகாக்க, பிறநாட்டினர் குடியேற தற்காலிக தடை!

கொரோனா தாக்கம் ; அமெரிக்கர்களை பாதுகாக்க,  பிறநாட்டினர் குடியேற தற்காலிக தடை!

7.92 லட்சம் பேர் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில், அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக தடுக்க கையெழுத்திட உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் அமெரிக்கா மற்ற நாடுகளை விட கோரமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. 7.92 லட்சம் பேர் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பற்றி உரிய எச்சரிக்கை கொடுக்கவில்லை என்று உலக சுகாதார இயக்குநர் உடன் மோதல், ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக நியூயார்க் மாகாண ஆளுநருடன் வார்த்தை யுத்தம் ஆகியவற்றை நடத்திவரும் அதிபர் டிரம்ப், கொரோனா பரவலுக்கு சீனாவை முதன்மை காரணமாக கூறியுள்ளார்.

மேலும், மற்ற உலக நாடுகளை விட அமெரிக்காவில் அதிகம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் அவர் சமீபத்தில் தெரிவித்தார். இந்த நிலையில், கண்களுக்குத் தெரியாத எதிரியும் தாக்குதலால், அமெரிக்க குடிமக்களின் வேலையை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதனால், பிறநாட்டினர் தற்காலிகமாக அமெரிக்காவில் குடியேறும் உத்தரவில் கையெழுத்திட உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments