சகோதரியின் தலையை துண்டித்து தலையுடன் ‘செல்பி’ எடுத்த தம்பியும் தாயும்!

You are currently viewing சகோதரியின் தலையை துண்டித்து தலையுடன் ‘செல்பி’ எடுத்த தம்பியும் தாயும்!

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் கோயேகாவ் கிராமத்தை சேர்ந்தவர் சோபா(வயது38). இவருக்கு 19 வயதில் மகள் இருந்தார். கடந்த ஜூன் மாதம் அவர் பெற்றோரின் சம்மதம் இன்றி 20 வயது வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இது சோபா மற்றும் குடும்பத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மகள் காதல் திருமணம் செய்ததால் அவர்களது குடும்ப மானம் போய்விட்டதாக கருதினர்.
இந்தநிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், கணவருடன் லட்காவ் கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் சோபா காதல் திருமணம் செய்த மகளை பார்க்க சென்று உள்ளார். அப்போது அவர் மகளை கட்டிப்பிடித்து அழுது உள்ளார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் அவர் தனது 18 வயது மகன் சங்கித்துடன் மகள் வீட்டுக்கு சென்றார். 
மனைவியின் குடும்பத்தினர் வந்ததால் அவரது கணவர் வீட்டில் இருந்த மற்றொரு அறைக்கு சென்று உள்ளார். இதையடுத்து ஒரு அறையில் சோபா, மகள் மற்றும் அவரது மகன் ஆகிய 3 பேரும் பேசிக்கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் இளம்பெண் தாய், தம்பிக்கு காபி போட சமையல் அறைக்கு சென்றார்.
அப்போது பின்னால் சென்ற தம்பி, குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்த அக்காளை அரிவாளால் கழுத்தை அறுத்தார். சத்தம்கேட்டு கணவர் ஓடிவந்தார். அதற்குள் தம்பி, அக்காளின் தலையை துண்டித்துவிட்டார். இதனால் பயந்து போன கணவர் உயிருக்கு பயந்து ஓடினார். 
வாலிபரும், அவரது தாயும் துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலையுடன் ‘செல்பி’ எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பெண்ணின் தலையை உறவினர்களிடம் காட்டி உள்ளனர். பிறகு அவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். 
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காதல் திருமணம் செய்த மகளை தலையை துண்டித்து கொலை செய்த தாய், தம்பியை கைது செய்தனர்.
பெற்றோரின் சம்மதம் இன்றி மகள் காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தால், பெற்ற தாயும் உடன்பிறந்த சகோதரனும் இணைந்து கர்ப்பமாக இருந்த மகளை கௌரவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments