முல்லைத்தீவில் அமைச்சர் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் கடற்றொழில் சங்கத்தின் தலைவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரசேகரனிடம் நந்திக்கடல் வீதி திருத்தம் குறித்து சுகிந்தன் உரையாடியபோதே அமைச்சரின் சகாக்கள் அவரை தாக்கியுள்ளதாக கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இனவாதம் இல்லை என உதட்டளவில் மேடைகளில் கூறிக் கொண்டாலும் இனவாதத்தை ஜே.வி.பியினரே வெளிப்படுத்துகின்றனர். அவர்களே உண்மையான இனவாதிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.