சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

You are currently viewing சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!
சாவகச்சேரி சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1010 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

 

சாவகச்சேரி சிறீலங்கா காவற்துறை நிலைய உப  பரிசோதகர் மயூரன் தலைமையிலான போதைப்பொருள் தடுப்பு சிறீலங்கா காவற்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபர் தற்போது சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply