சிறீலங்காவில் எகிறும் கொரோனா!

சிறீலங்காவில் எகிறும் கொரோனா!

இலங்கையில் நேற்று ஒரே நாளில் 892 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 298 பேர் கொழும்பு மாவட்டத்திலும் கம்பஹா மாவட்டத்தில் 203 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கொம்பனித்தெரு மற்றும் மட்டக்குளிய பகுதிகளில் தலா 24 பேரும், கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் 21 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் வத்தளையில் 26 பேரும், ஜா எலவில் 21 பேரும், ராகமவில் 19 பேரும் கொரோனா தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இலங்கையர்கள் 40 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள