சிறீலங்கா காவற்துறை இரண்டு வருட காலமாக ஆபாச காணொளியை காட்டி, மிரட்டி பாலியல்!

You are currently viewing சிறீலங்கா காவற்துறை இரண்டு வருட காலமாக ஆபாச காணொளியை காட்டி, மிரட்டி பாலியல்!

யாழ்ப்பாணம்,- பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட பதின்ம வயது சிறுமியை கடந்த இரண்டு வருட காலமாக ஆபாச காணொளியை காட்டி, மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திவந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிவாரணம் தருவதாக 17 வயது சிறுமியை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அழைத்துச் சென்று, ஆட்களற்ற வீடொன்றினுள் வைத்து இருவரும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதோடு, அதனை காணொளியாக எடுத்து வைத்து, அதனை காட்டி, கடந்த இரண்டு வருடங்களாக சிறுமியை இரண்டு உத்தியோகத்தர்களும் மிரட்டி, தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட சிறுமி சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி கடந்த இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவ்விடயம் வெளிவந்துள்ளது.

இதேவேளை குறித்த இரு சிறீலங்கா காவற்துறை உத்தியோகத்தர்களும், தம்மிடம் இருந்த காணொளியை பாடசாலை சிறுவர்கள் சிலருக்கு காண்பித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments