சிறுமியை தாக்கிய சமிந்தவை சிறைக்குள் புரட்டியெடுத்த கைதிகள்!

You are currently viewing சிறுமியை தாக்கிய சமிந்தவை சிறைக்குள் புரட்டியெடுத்த கைதிகள்!

முல்லைத்தீவு – மணலாறு பகுதியில் நான்கரை வயது சிறுமி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குகுல் சமிந்த மீது, சிறைக் கைதிகள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுமி தாக்கப்பட்ட வீடியோ வெளியானதை அடுத்து சிறுமியின் தாயாரின் கள்ளக்காதலனான குகுல் சமிந்த கைது செய்யப்பட்டார்.

அவர் அனுராதபுர சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதே சக கைதிகளாால் மோசமாக தாக்கப்பட்டார். தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த குகுல் சமிந்த, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments