சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்த காதலனும் நண்பர்களும் கைது!

You are currently viewing சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்த காதலனும் நண்பர்களும் கைது!

16 வயது சிறுமி ஒருவருடன் அதே வயதுடைய காதலன் உடலுறவு கொண்ட போது அதனை வீடியோ பதிவு செய்து, சிறுமியை பாலியல் செயற்பாட்டுக்காக அழைத்த காதலன் மற்றும் அவரின் நண்பர்கள் உட்பட 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக கொக்குவில் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கொக்குவில் சிறீலங்கா காவற்துறை பிரிவில் உள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்று வரும் 16 வயது சிறுமி ஒருவரை 2 மாதங்களுக்கு முன்னர் அதே வயதுடைய அவரது காதலன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் சிறுமியை அவர் துஷ்பிரயோகம் செய்தபோது, நண்பர்கள் மூவர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர், குறித்த சிறுமியை தொடர்பு கொண்ட காதலனின் நண்பர்கள், குறித்த உடலுறவு வீடியோ சீடி வடிவில் தம்மிடம் உள்ளதாகவும் தங்களுடன் உடல் உறவு கொள்ள வருமாறும் இல்லாவிடில் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பப்போவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.

இது தொடர்பாக சிறுமி, பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் 16 வயது காதலன் மற்றும் அவனது 16 வயதுடைய நண்பர்கள் உட்பட 3 பேரை கைது செய்த பொலிஸார், தலைமறைவாகியுள்ள ஒருவரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments