ஜேர்மனி பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான கேள்வி எழுப்பும்!

You are currently viewing ஜேர்மனி  பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான கேள்வி எழுப்பும்!

ஜேர்மனிக்கான ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் விஜயத்தின் போது இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைள் குறித்தும், நல்லிணக்கம் மற்றும் யுத்தகாலஅநீதிகளிற்கு பொறுப்புக்கூறல் குறித்தும் அந்த நாடு கேள்வி எழுப்பும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனி ஏனைய மேற்குலக நாடுகள் போல பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்துவருகின்றது.

இந்நிலையில் ஜூன் 11ம் திகதி ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதியிடம் பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் குறித்து ஜேர்மனியின் அதிகாரிகள் கேள்வி எழுப்ப உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனது விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சரையும் பாதுகாப்பு அமைச்சரையும் சந்திப்பார். ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிச் மேர்சினை ஜனாதிபதி சந்திக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply