டென்மார்க்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

You are currently viewing டென்மார்க்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

டென்மார்க்கில் உள்ள மத வழிபாட்டு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. டென்மார்க் நாஸ்ட்வேட்(Naestved) நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் (11.05.2024)முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழின அழிப்பின் மூலம், தங்கள் இன்னுயிர்களை ஈர்ந்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு நினைவேந்தல் வழிபாடு பொதுமக்களால் உணர்வுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் பொதுமக்கள் தங்கள் கைகளில் நெய்விளக்கேந்தி நெஞ்சினில் மரணித்தவர்களின் நினைவை உணர்வுடன் சுமந்து தரிசித்தனர்.

டென்மார்க் Grindsted நகர தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (12.05.2024) டென்மார்க்கின் கிறின்சட் நகரில் உள்ள தேவாலயத்தில், 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தலும் திருப்பலிப் பிரார்த்தனையும் மிகவும் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் Herlev நகரில் உள்ள தேவாலயத்தில் இன்று (12.05.2024) முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் உயிர்நீத்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு வழிபாடும், திருப்பலி நிகழ்வும் Vor Frue தேவாலயத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களால் அகவணக்கம் மலர் வணக்கம் மற்றும் ஈகைச்சுடரேற்றல் மிகவும் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.

டென்மார்க்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்! 1 டென்மார்க்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்! 2 டென்மார்க்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்! 3 டென்மார்க்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்! 4

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments