தடைகளை தாண்டி கிரானில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு…!

You are currently viewing தடைகளை தாண்டி கிரானில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு…!

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் நேற்று (15)  முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கிராம மக்கள் கலந்துகொண்டதுடன் அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்ட வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பல பகுதிகளிலும் பல்வேறு அமைப்புக்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை,  திருகோணமலை திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில்இ முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உட்பட நால்வர் கடந்த  ஞாயிற்றுக்கிழமை சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல்வேறு தரப்பினருக்கு எதிராக நீதிமன்றங்களினால் தடையுத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் பல்வேறு அடக்குமுறைகள் மற்றும் கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments