தண்ணீர் கேட்ட பெண்களை ஆடையின்றி இழுத்து சென்ற கொடூரமான சம்பவம்!

You are currently viewing தண்ணீர் கேட்ட பெண்களை ஆடையின்றி இழுத்து சென்ற கொடூரமான சம்பவம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் வர்த்தக நிலையத்தில் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இளம்பெண் உட்பட 4  பெண்களையும்  சுமார் ஒரு மணி நேரம் தெருக்களில் ஆடையின்றி அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வர்தக நிலையம் ஒன்றுக்குச் சென்ற 4 பெண்கள் குறித்த வர்த்தக நிலையத்தில் பொருட்களை திருடியபோது பிடிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு கூடியவர்கள் ஓர் இளம்பெண் உட்பட 4 பெண்களையும் சரமாரியாக தாக்கிய பின்னர் அவர்களது உடைகளை கலைந்து சுமார் ஒரு மணி நேரம் தெருக்களில் ஆடையின்றி அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தின் காணொளிகள் சமூகவலை தளங்களில் பரவி வருகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும்போது,

‘பைசலாபாத்தில் உள்ள பாவாசாக் சந்தைக்கு நாங்கள் சென்றபோது தாகம் எடுத்ததால் கடை ஒன்றுக்குள் சென்று தண்ணீர் கேட்டோம். ஆனால் நாங்கள் திருடும் நோக்கத்தில் கடைக்குள் நுழைந்ததாக அதன் உரிமையாளர் குற்றம் சாட்டி எங்களை சரமாரியாக தாக்கினார்கள். எங்களை ஆடையின்றி வீடியோக்களையும் எடுத்தனர்.

எனினும் இந்த கொடுமையை யாரும் தடுக்க முன்வரவில்லை என கண்ணீவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டு பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறும்போது, இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் 5 முக்கிய சந்தேக நபர்களைக் கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக கூறினார்.

இதேவேளை அண்மையில் பாகிஸ்தான் இலங்கையரை கடுமையாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் பெண்கள் ஆடையின்றி அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments