தமிழ்தேசிய முன்னணியை வீழ்த்திய சாராய அரசியலும் மதவாதச் செயற்பாடும்!

You are currently viewing தமிழ்தேசிய முன்னணியை வீழ்த்திய சாராய அரசியலும் மதவாதச் செயற்பாடும்!
இன்று அமைச்சர் பிமல் ரத்னாயக்காவின் பாராளுமன்ற உரையில் சாராயம் கொடுத்து தமிழரசு கட்சி வென்றது என்று சொல்லியிருந்தார். அதில் உண்மையுண்டு.
ஆனால் அதை NPP வேட்பாளர்கள் சிலரும் யாழ்ப்பாணத்தில் செய்திருந்தனர். வாக்களிப்பதற்கு சாராயம் தரலாம் என்று வேட்பாளர் கேட்ட நேரடி சாட்சிகளும் உள்ளனர்.
ஆனால், அது அக்கட்சியின் கொள்கை நிலைப்பாடல்ல. அவர்களின் கட்டுப்பாட்டை மீறியே தனிநபர்களால் நடந்திருந்தது.
ஆனால், தமிழரசு கட்சி பாரிய அளவில் இயற்கை நீதிக்கு முரணாக நடந்து கொண்டது.
அவ்வாறு தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் நடந்து கொள்வதை அவர்களது கட்சி தலைமையும் அறிந்தே நடைபெற்றது.
இவ்வாறு இவர்கள் சாராயம் வழங்கி, குறுக்கு வழிகளில் வாக்கு சேகரிக்காது இருந்திருந்தால், யாழ்.மாநகரசபையில் ஆகக்குறைந்தது 16 முதல் 18 வட்டாரங்களில் சைக்கிள் வென்றிருக்கும்.
சைக்கிளின் வெற்றியை தடுப்பதற்கு பல குறுக்கு வழிகளை மேற்கொண்டனர்.
எந்த கீழான நிலைக்கு சென்றும் எம்மை தோற்கடிக்க வேண்டுமென்று பலர் கூட்டாக செயற்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாண மாநகர சபையில் நான் அயல் வட்டாரத்திலேயே போட்டியிட்டேன். தமிழரசு கட்சி என்னை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக வாக்களிப்பில் ஆர்வமின்றி இருந்த பலருக்கும் சாராயத்தை வாரியிறைத்து வான்களிலும் கார்களிலும் ஏற்றிவந்து வாக்களிக்கப் பண்ணினார்கள்.
சிவசேனையை பயன்படுத்தி எனக்கெதிராக மதவாத பிரசாரம் செய்தார்கள்.
அவதூறாக துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வீதியெங்கும் எறிந்தார்கள்.
இத்தனையும் செய்து 20 வாக்குகளால்தான் என்னை தோற்கடிக்க அவர்களால் முடிந்தது.
அவர்களது அற்ப இலக்கு வெற்றிபெற்றிருக்கலாம்.
ஆனால், எமது இலக்கு தேர்தல் அரசியலுக்கானது அல்ல.
இனத்தின் அபிலாசைகளுக்கானது.
எமது தோல்விகள் இனத்தின் தோல்விகள் என்று உணராமல் வாக்களிப்பில் ஆர்வமின்றி இருந்த தமிழ் மக்களுக்கும் சேர்த்து, அவர்களுக்காகவும் தொடர்ந்தும் பயணிப்போம்.

Theeban Arokianather

பகிர்ந்துகொள்ள

Leave a Reply