தமிழ் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனைக்குப் பின்னால் படைத்தரப்பினரும் காவல்துறையினரும்!

You are currently viewing தமிழ் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனைக்குப் பின்னால் படைத்தரப்பினரும் காவல்துறையினரும்!

வடக்கு மற்றும் கிழக்கில் போதைவஸ்து பாவனைக்கு பின்னால் படையினரும் காவல் துறையினரும் செயற்படுவதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எனவே இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, போதைவஸ்து பொருட்கள் கைப்பற்றப்பட்ட பின்னர் அவற்றை அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பும் போது உரிய சட்டமுறை பின்பற்றப்படவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக நீதிமன்றத்தின் ஊடாக குறித்த போதைப்பொருட்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்படுவது சிறந்த முறை என குறிப்பிட்ட அவர், காவல்துறையினர் நேரடியாக அவற்றை ஆய்வுக்கு அனுப்பும் முறை இரத்துச்செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments