தாயகத்தில் நடைபெற்ற புனல் விழுங்கியநாள் நினைவுகள்!

You are currently viewing தாயகத்தில் நடைபெற்ற புனல் விழுங்கியநாள் நினைவுகள்!

உடுத்துறை

தாயகத்தில் நடைபெற்ற புனல் விழுங்கியநாள் நினைவுகள்! 1

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது.

உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர்.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.

கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு

தாயகத்தில் நடைபெற்ற புனல் விழுங்கியநாள் நினைவுகள்! 2

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்நல் முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள சுனாமி நினைவாலயத்திலும் ,முல்லைத்தீவு கள்ளப்பாடு மைதானத்திலும் ,புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்திலும் ,கள்ளப்பாடு பாடசாலையிலும்  26.12.2022 இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர்.

அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள் ,மக்கள் பிரதிநிதிகள் ,மத தலைவர்கள் உள்ளிட்டவர்களும்  கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2004 ஆம் ஆண்டு இதே நாளில் இடம்பெற்ற ஆழிப்பேரலை (சுனாமி ) பேரனத்தத்தில் முல்லைத்தீவில் மாத்திரம் 3352 பேர் காவு கொள்ளப்பட்டதுடன் பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போனதுடன் உடைமைகள் வாழ்விடம் என்பனவும் பறிக்கப்பட்டிருந்தன.

கிளிநொச்சி

தாயகத்தில் நடைபெற்ற புனல் விழுங்கியநாள் நினைவுகள்! 3

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம்  நாடு பூராகவும் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் கோகுல்ராஜ் தலைமையில்  இன்று  காலை 9 15 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் கலந்து கொண்டதுடன் முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தி உயிரிழந்தவர்களுக்கு நினைவு கூறும் முகமாக சுடர்களும் ஏற்றப்பட்டது

இதன் போது கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

மன்னார்

சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற இன்றுடன் 18 வருடங்கள் ஆகின்ற நிலையில் தேசிய பாதுகாப்பு தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மன்னார் மாவட்டத்திலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றன.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு செய்த சுனாமி நினைவேந்தல் நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது.சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற இன்றுடன் 18 வருடங்கள் ஆகின்ற நிலையில் தேசிய பாதுகாப்பு தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மன்னார் மாவட்டத்திலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றன.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு செய்த சுனாமி நினைவேந்தல் நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது.

தாயகத்தில் நடைபெற்ற புனல் விழுங்கியநாள் நினைவுகள்! 4

திருகோணமலை

சுனாமி நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெருகல் முகத்துவாரத்தில் இடம்பெற்றது.

வெருகல் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் இவ் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

தாயகத்தில் நடைபெற்ற புனல் விழுங்கியநாள் நினைவுகள்! 5
தாயகத்தில் நடைபெற்ற புனல் விழுங்கியநாள் நினைவுகள்! 6
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments