தாய் நிலத்தின் விடியலுக்காக தொடர்ந்து பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்!

You are currently viewing தாய் நிலத்தின் விடியலுக்காக தொடர்ந்து பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்!

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி  11 ஆம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்​

மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  யேர்மனி கால்சூவஎன்னும் இடத்தில் இருந்து   24.02.2024  09:30 மணியளவில் அகவணக்கத்துடன் ஈருருளிப்பயணமானது  ஆரம்பமாகி  ரைநனு (Rheunau)வை நோக்கி    பயணித்து பிரான்சு எல்லை ஊடக சிற்ருக்காம் வந்தடைந்து   25.02.2024  சிற்ரிக்காம் நகரசபை முன்றலில் அகவணக்கத்துட் ஆரம்பமாகி தொடர்ந்து பயணிக்ககின்றது

தமிழர்களுக்கெதிரான  தாங்கொணா அடக்குமுறைகள் ,இன்னல்களினால் பிறப்பெடுத்த தமிழீழப் விடுதலைப் போராட்டம் பல்லாயிரம் மாவீரர்களினதும் தமிழ் மக்களினதும் தியாகத்தினால் உயர்நிலைக்குச் சென்று, 2009 இல் நடந்த திட்டமிட்ட இனவழிப்புப் போருக்குப் பின்னும் அறவழிப்போராட்டமாக தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 55ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு, தமிழின அழிப்பிற்கு எதிராக,உணர்வெழுச்சியுடன் அனைத்துல நீதி வேண்டி விடுதலை நோக்கி வீறுகொண்டு அறவழியில் இப்போராட்டம் பயணிக்கின்றது.

தமிழர்கள் இவ்வாறான தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்களை முன்னெடுப்பதனூடாக,எமது விடுதலையை  தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில்,  எமது  தமிழீழ மண்ணை மீட்டு ,சுதந்திரமாக வாழ  முடியும்.இச்சூழமைவில் காலத்தின் தேவை அறிந்து நாம் செயலாற்ற வேண்டும்.

இந்த அறவழிப்போராட்டமானது 04.03.2024 அன்று ஜெனிவாவைச் சென்றடையவுள்ளது.

எம் தமிழ் உறவுகளே!

தமிழின அழிப்பற்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் ஏதிலிகளாக வாழும் நாம் ,அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்களப் பேரினவாத அரசினை நிறுத்தி தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்பதையும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை உறுதியாக வலியுறுத்த முடியும்.

எனவே இப்போராட்டங்களுடன் நீங்களும் இணைந்து ஓரணியாய் முரசறைவோம்.

“ காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கமைய போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை “ -தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்”

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.”

 

தாய் நிலத்தின் விடியலுக்காக தொடர்ந்து பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்! 1
தாய் நிலத்தின் விடியலுக்காக தொடர்ந்து பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்! 2
தாய் நிலத்தின் விடியலுக்காக தொடர்ந்து பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்! 3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments