திரவ எரிபொருள் வாகனங்களின் தடைக்கு, தடை போட்டது நோர்வே அரசு!

You are currently viewing திரவ எரிபொருள் வாகனங்களின் தடைக்கு, தடை போட்டது நோர்வே அரசு!

நோர்வேயின் தலைநகர் “Oslo” மற்றும் பெருநகரமான “Bergen” ஆகிய நகரங்களின் மையப்பகுதிகளில், திரவ எரிபொருளில் (பெற்றோல் / டீசல்) இயங்கும் வாகனங்களை முற்றாக தடைசெய்யும் திட்டத்தை நோர்வே மத்திய அரசு நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த நகரங்களின் மாநகர நிர்வாகங்களின் திட்டப்படி, 2025 ஆம் ஆண்டிலிருந்து திரவ எரிபொருளில் இயங்கும் கனரக வாகனங்கள், பாரவூர்திகள், பேரூந்துகள் போன்றவற்றை முதற்கட்டமாக முற்றாக தடை செய்வதோடு, தொடர்ச்சியாக திரவ எரிபொருளில் இயங்கும் சாதாரண மகிழூந்துகளையும் தடை செய்ய உத்தேசித்திருப்பதாக அறிவித்துள்ளதோடு, தடைக்கு உள்ளாகும் பகுதிகளில் நிரந்தரமாக வசிக்கும் பொதுமக்களுக்கு இத்தடையிலிருந்து விதிவிலக்கு 2030 ஆம் ஆண்டுவரை வழங்கப்படுமெனவும் முன்னதாக மாநகரசபைகளை ஆதாரம் காட்டி செய்திகள் வெளிவந்திருந்தன.

மேற்படி மாநகரசபைகளின் திட்டத்தின்படி, தடை செய்யப்படும் பகுதிகளுக்குள் இருக்கும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்கான வழங்கல்கள் பாதிக்கப்படுவதோடு, வெறும் பலவிதமான அசௌகரியங்கள் பொதுமக்களுக்கு ஏற்படுமென முன்னதாக விசனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், மேற்படி மாநகரசபை நிர்வாகங்களின் திட்டத்தை நோர்வே மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments