திருநெல்வேலி தனியார் விடுதியில் சிறுமியின் சடலம் மீட்பு!

You are currently viewing திருநெல்வேலி தனியார் விடுதியில் சிறுமியின் சடலம் மீட்பு!

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்து நேற்று மதியம் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார். உயிரிழந்த சிறுமி திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமியுடன் அறையில் தங்கியிருந்த பேத்தியார் மயக்க நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலும் சிறுமி 3 நாட்களுக்கு முன்னரே இறந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது, இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments