தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

You are currently viewing தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

பளை காவல்நிலைய பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி முகாவில் பகுதியில் வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

இயக்கச்சி முகாவில் பகுதியில் நேற்று (08) அவரது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரை அவதானித்த உறவினர்கள் பளை சிறீலங்கா காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்திருந்த பளை காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டதோடு கிளிநொச்சி மாவட்ட நீதவானுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் 19வயதையுடைய சந்திரகுமார் தமிழரசன் எனவும் இவர் முகாவில் இயக்கச்சி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments