தூய தமிழ்ப்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் நான் ஒரு தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள்!

You are currently viewing தூய தமிழ்ப்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் நான் ஒரு தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள்!

தூயதமிழில் பெயர் சூட்டிய குழந்தைகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று வவுனியாவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டது.

தூய தமிழ்ப்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் நான் ஒரு தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள்! 1

தனையன் வழியில் தமிழ்காப்போம் என்ற விளிப்போடு முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வானது மிக முக்கியமான காலத்தின் கட்டாயமாக உணரமுடிகிறது. விடுதலைப்புலிகளின் நிர்வாக நடைமுறைக்காலகட்டத்தில் பெரும் எதிர்பார்ப்போடு முன்னெடுக்கப்பட்ட இப் பணியானது கடந்த 13 ஆண்டுகளாக யாரும் தொட்டுப்பாக்காத பக்கமாகவே இருந்து வருகின்றது. இதனால் எமது தமிழ் குழந்தைகளுக்கு பிறமொழியில் பெயர் சூட்டும் அடிமைநிலைக்குள் தள்ளப்பட்ட மனநிலையைத்தான் கடந்த 13 ஆண்டுகளாக பார்க்கமுடிகின்றது.
இந்த நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்திருக்கும் இப்பணியானது நிச்சயமாக தமிழ் என்ற அடையாளத்தை இழக்கும் தமிழர்களுக்கு விளிப்பை ஏற்படுத்தும் இந்த மகத்தான பணிக்கு எமது தமிழ் முரசம் வானொலி மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

தூய தமிழ்ப்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் நான் ஒரு தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள்! 2

தூய தமிழில் பெயர் சூட்டிய சிறார்களை
கௌரவித்து 5250/= பெறுமதியான வங்கி கணக்கை ஆரம்பித்து கையளித்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் 18/12/2022 இன்று நடைபெற்றது,என்பது குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments