தையிட்டியில் மீண்டும் பதட்டம் காவல்துறையின் அடாவடி!

You are currently viewing தையிட்டியில் மீண்டும் பதட்டம் காவல்துறையின் அடாவடி!

தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகவும் அது அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி காணிக்கு சொந்தமான மக்களோடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றது அந்தவகையில் மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தையிட்டி என்ற பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக ஒரு விகாரையை கட்டிமுடித்திருக்கின்றார்கள். இராணுவத்தின் உதவியுடன்,இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாக இந்த விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது அது அகற்றப்படவேண்டும்,அவ்வளவுதான்.ஏனென்றால் அந்த மக்கள் வேறு ஒரு இடத்திலே தங்களிற்கு தேவையான காணியை பெறுவதற்கு தயாராகயில்லை

தையிட்டியில் மீண்டும் பதட்டம் காவல்துறையின் அடாவடி! 1

தையிட்டியில் மீண்டும் பதட்டம் காவல்துறையின் அடாவடி! 2

பகிர்ந்துகொள்ள

Leave a Reply