நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கும் அருகதை இலங்கை அரசுக்கு இல்லை!

You are currently viewing நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கும் அருகதை இலங்கை அரசுக்கு இல்லை!

நினைவேந்தலில் ஈடுபடும் தமிழர்களை துன்புறுத்தும், அச்சுறுத்தும் , கைதுசெய்யும் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்க முடியாது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் நினைவேந்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழர்கள் மீதான தாக்குதலை பேர்ள் கண்டிக்கின்றது. 15 வருடங்களிற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தின் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை தமிழர்கள் நினைவேந்தும் இந்த தருணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது காயங்களை ஆற்றுதல் கூட்டு நினைவேந்தலின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

தங்கள் நேசத்திற்குரியவர்களை நினைவுகூரும் தமிழர்களை துன்புறுத்தும் அச்சுறுத்தும் கைதுசெய்யும்இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்க முடியாது.

கடந்த வருடம் வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் உள்ளுர் மக்களிற்கு பிஸ்கட்கள் போன்றவற்றை வழங்கியிருந்தனர் – திருகோணமலை சம்பவம் அவர்களின் போலிநாடகத்தை வெளிப்படுத்தியுள்ளது என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments