நாங்கள் நினைத்தால் வீதியில் வைத்து சுடுவோம்!

நாங்கள் நினைத்தால் வீதியில் வைத்து சுடுவோம்!

வீதியில் சென்றவரை வழிமறித்த சிறீலங்கா காவல்த்துறை நாங்கள் நினைத்தால் வீதியில் வைத்து சுடுவோம் என்று துப்பாக்கியை காட்டி மிரட்டினர் என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வடமராட்சி உடுப்பிட்டியில் நடந்தது.
உடுப்பிட்டி பகுதியில் மோட்டார் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவரை, மோட்டார் வண்டியில் வந்த சிறீலங்கா காவல்த்துறையினர் வழிமறித்துள்ளனர்.

தன்னை துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன் தகாத வார்த்தைகளால் பேசிய சிறீலங்கா காவல்த்துறை , உடுப்பிட்டி சந்தியில் தாங்கள் மறித்தபோது நிற்காமல் சென்றதாக கூறி மிரட்டியுளள்னர்.
எனினும், அந்த இளைஞர் உடுப்பிட்டி சந்திக்கு செல்லவில்லை. அருகில் உள்ள வெதுப்பகம் ஒன்றிற்கு தான் போய் வருகிறேன் என்றும், உடுப்பிட்டி சந்திக்கு செல்லவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
தேவையெனில் வெதுப்பகத்தில் அதைக் கேட்டு உறுதிப்படுத்தப்படுத்தும்படி அந்த அப்பாவி குறிப்பிட்டுள்ளார். எனினும் அதை காதில் வாங்காமல் சிறீலங்காவின் இனவழிப்புபடையினர் தொடர்ந்தும் மிரட்டலில் ஈடுபட்டனர்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள