நான் கண்ட போராளிகள் களமும் வாழ்வும் நூல் வெளிவந்துள்ளது!

You are currently viewing நான் கண்ட போராளிகள் களமும் வாழ்வும் நூல் வெளிவந்துள்ளது!

எங்கள் பெருந்தகை ஓவியர் புகழேந்தி அவர்களின் “நான் கண்ட போராளிகள்
களமும் வாழ்வும்” எனும் பொத்தகம் வெளிவந்துள்ளது.

தலைவரின் தனித்துவம் முதல் போராளிகளின் தனித்திறமைகள்,ஈகம் வரையாக இக் கதைகள் ஊடாக ஒரு_பெரும்_யாத்திரை_போயுள்ளார்.

எங்கள் செம்மண்ணில் எங்களோடு வாழ்ந்த போராளிகளின் இதுவரை அறியப்படாத பல பக்கங்களை இந்த நூலின் ஊடாக அழகாய் அற்புதமாய் தரிசித்துள்ளார்.

அவர் தரிசித்த புனிதர்களையும் புனிதமான இடங்களையும் வாசகராகிய எமக்கு காட்டிட எமையும் இந்த நூலினூடாக
அழைத்துச் செல்கின்றார்.

இன்னொரு வகையில் சொன்னால் பொதுமக்கள் மற்றும் போராளிகளின் நெஞ்சங்களில் ஆழ ஊடுருவி வேவு செய்து ஆய்வு செய்து பக்குவமாய் பார்த்துப் பதிவு செய்துள்ளார்.

ஒளிகொண்ட பொருத்தமான ஒளிப்படங்களுடன் ஒவ்வொரு போராளிக்கும் தனித்தனியே கட்டுரைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இயக்கத்தில் பிளவுகள் ஏற்பட்டு பலரும் பிரிந்து சென்று பல திசைகளில் சென்ற காலகட்டம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை தலைவருடன் நெருக்கமாக பயணப்பட்ட
மத்திய குழு உறுப்பினர் திரு பேபி சுப்பிரமணியம் முதல் ஊடகப் போராளி இசைப்பிரியா வரை பல போராளிகளின் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்பதுகளின் பிற்பகுதியில் தன்னோடு அறிமுகமான மூத்த போராளி திருமிகு யோகரத்தினம் யோகி அவர்களின் காதையினையும் அற்புதமாய் பதிவு செய்துள்ளார்.

“யோகரத்தினம் யோகி வரலாறும் சமராய்வும்” எனும் அக்கட்டுரையில் சிங்கள தேசம் இணைத்தலைமை நாடுகளுக்கு முன்வைத்த “#Project_Beacon” எனும் சதித்திட்டம் தொடர்பிலும் மிகத் துல்லியமாக எழுதியுள்ளார்.

காணொளி ஒன்றில் யோகரத்தினம் யோகி அவர்களின் கனிவு தரும் குரலில் உள்ள அந்த மேடைப் பேச்சினையும் எழுத்து வடிவில் கொண்டு வந்திருப்பதால் தமிழர் வரலாறு நெடுக அந்த விடையங்கள் பயணிக்க வழிகோலியும் உள்ளார்.

Our Nationalism is not narrow, not aggressive and not selfish.

It is inspired and sharpened by the sense of #Grievances!

ஒவ்வொரு கட்டுரையினையும் ஏன் ஒவ்வோர் எழுத்தினையும் வாசிக்கும் போதும் மேலுள்ள ஆங்கில வாசகங்கள் தரும் உணர்வே நெஞ்சத்தின் ஆழத்தில் மேலிடுகின்றது.

பெருமளவு நேரம் ஒதுக்கி எமது போராளிகளின் வரலாற்றினை பதிவு செய்த ஓவியர் புகழேந்தி ஐயாவுக்கு தங்களுக்கு எங்கள் நன்றிகள்.😍


          -வயவையூர் அறத்தலைவன்

பகிர்ந்துகொள்ள