நிலாவரையில் திடீர் புத்தர்! எதிர்ப்பையடுத்து இராணுவமுகாமுக்குள் பின்வாங்கினார்!!

You are currently viewing நிலாவரையில் திடீர் புத்தர்! எதிர்ப்பையடுத்து இராணுவமுகாமுக்குள் பின்வாங்கினார்!!

யாழ்ப்பாணம், புத்தூர் நிலாவரைக்கருகில் புத்தர் சிலையொன்று இரவோடிரவாக வைக்கப்பட்டதால், அங்கு பாரிய எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. இலங்கை இராணுவத்தினரால் நேற்றிரவு இப்புத்தர் சிலை வைக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், செய்தியறிந்து உடனடியாக நிலாவரைக்கு சென்ற, வலி – கிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் திரு. நிரோஸ் தியாகராஜா, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திரு. செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் நிலைமைகளை ஆராய்ந்துள்ளதோடு கடும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

நிலாவரையில் திடீர் புத்தர்! எதிர்ப்பையடுத்து இராணுவமுகாமுக்குள் பின்வாங்கினார்!! 1

இந்நிலையில், நிலாவரையில் வைக்கப்பட்ட புத்தரை இலங்கை இராணுவத்தினர் திரும்பவும் எடுத்துச்சென்றுள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments