நுவரெலியா விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினரிடம் ஒப்படைப்பு!

You are currently viewing நுவரெலியா விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினரிடம் ஒப்படைப்பு!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பேருந்து- வேன் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று (21.01.2023) நள்ளிரவு வீட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

அதன்படி, வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோரின் பூதவுடல் நள்ளிரவு 12:10 மணியளவில் ஹட்டன் – டிக்கோயா ஜும்மா பள்ளிவாசலுக்கு கொண்டு வரப்பட்டது.

உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டனர். பள்ளிவாசலில் சடலங்கள் வைக்கப்பட்ட பின்னர், இஸ்லாமிய சம்பிரதாயப்படி முதலில் குடும்பத்தினர், பிறகு பெண்கள், பிறகு ஆண்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதன்போது, ஐந்து சடலங்களிலும், முகங்கள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இறுதி அஞ்சலி செலுத்த அனுமதித்த பின்னர், அதிகாலை 3 மணியளவில் இஸ்லாமிய மத சடங்குகள் மற்றும் ஏனைய சடங்குகளின் பின்னர் சடலங்கள் ஹட்டன் டிக்கோயா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த வேன் சாரதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, ஹட்டன் – குடாஓயா பகுதியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்த சாரதியான தினேஷ் குமாரின் இறுதிக் கிரியைகள் நாளை 23.01.2023 இடம்பெற்று, ஹட்டன் குடாஓயா பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் சடலமும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments