நெதன்யாகுவுக்கு எதிராக கைதாணை: நாள் குறித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

You are currently viewing நெதன்யாகுவுக்கு எதிராக கைதாணை: நாள் குறித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ஆகிய இருவரும் போர் குற்றங்கள் தொடர்பாக கைதாணையை எதிர்கொள்ள இருக்கிறார்கள். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி, தொடர்புடைய இருவரையும் கைது செய்ய பிடியாணைக்கு முறையான விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் நெதன்யாகு மீது போர் குற்ற நடவடிக்கை பாயும் என்ற தகவல் இஸ்ரேலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நீதியை சிதைக்கும் செயல் என அமைச்சர் ஒருவர் கொந்தளித்துள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant, ஹமாஸ் படைகளின் அரசியல் தலைவர் Ismail Haniyeh, தலைமை ராணுவ அதிகாரி Mohammed Deif ஆகியோர் மீதும் கைது நடவடிக்கை பாயும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஹமாஸ் கொலைகாரர்கள் மற்றும் துஸ்பிரயோக வீரர்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை முன்னெடுக்க, சட்டத்தரணிகள் இஸ்ரேல் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மீதும் அதே ஒப்பீடை முன்னெடுப்பது முறையல்ல என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் கொந்தளித்துள்ளார்.

ஹமாஸ் படைகள் முன்னெடுத்த கொடூர படுகொலைகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இஸ்ரேல் போரிட்டு வருவதாக அமைச்சர் ஒருவர் விளக்கமளித்துள்ளார். ஆனால், சட்டத்தரணி Karim Khan தெரிவிக்கையில்,

அக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு பின்னர் காஸா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான போர் தொடர்பில் பெயரிடப்பட்ட ஐந்து பேரும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது விசாரணை முன்னெடுத்து வருகிறது.

ஆனால் சமீபத்தில் ஹமாஸ் படைகளின் அக்டோபர் தாக்குதல், அதற்கு பதிலளிக்கும் வகையில் காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்த கண்மூடித்தனமாக தாக்குதல், இதனால் கொல்லப்பட்ட 35,000 அப்பாவி மக்கள் உள்ளிட்டவை மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வை திரும்பியது. இரு தரப்புக்கும் எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதிகள் உறுதி செய்யப்பட்டால், மிக விரைவில் கைதாணை வெளியிடப்படும் என்றே கூறப்படுகிறது. ஆனால் வல்லரசு நாடுகளின் உதவியுடன் நெதன்யாகு தப்பிக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments