“நெதன்யாகுவை போர் குற்றவாளியாக தீர்மானிக்க வேண்டும்” – ஸ்பெயினின் முன்னாள் அமைச்சர் கொந்தளிப்பு!

You are currently viewing “நெதன்யாகுவை போர் குற்றவாளியாக தீர்மானிக்க வேண்டும்” – ஸ்பெயினின் முன்னாள் அமைச்சர் கொந்தளிப்பு!

நெதன்யாகுவை போர் குற்றவாளியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என ஸ்பெயினின் முன்னாள் அமைச்சர் Ione Belarra ஆவேசத்துடன் கூறியுள்ளார். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் பலி எண்ணிக்கை 20,000த்தை நெருங்கியுள்ளது. இதற்கிடையில் விடுவிக்கப்பட்ட தங்கள் பிணைக்கைதிகளை இஸ்ரேல் இராணுவமே தவறுதலாக சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தாங்க முடியாத சோகம் என்று வேதனை தெரிவித்தார்.

இந்த நிலையில் ஸ்பெயினின் முன்னாள் சமூக உரிமைகள் அமைச்சர் மற்றும் உளவியலாளரான Ione Belarra பாலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலையை கண்டனம் செய்வது முக்கியம் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பாலஸ்தீனத்தில் மக்கள் கொல்லப்படுவது குறித்து அவர் கூறுகையில், ‘நாம் நம் மகன்கள் மற்றும் மகள்களுக்கு என்ன சொல்வோம்? பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டனர், யாரும் எதுவும் செய்யவில்லை என்பதை எப்படி விளக்குவோம்? ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகள், தங்கள் உடலின் பாகங்களையும், டஜன் கணக்கான குடும்ப உறுப்பினர்களையும் இழந்துள்ளனர்.

நெதன்யாகுவுடனான தூதரக உறவுகளைத் துண்டித்து, அவரை முன் நிறுத்தும் திறன் கூட இல்லாத நிலையில், பாலஸ்தீனம் சர்வதேச சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கோருவதில் உள்ள மகத்தான முரண்பாட்டை நாம் ஏற்க முடியாது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை ஒரு போர் குற்றவாளி என்று தீர்மானிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments