நேட்டோ மீது சீறும் உக்ரைனிய அதிபர்!

You are currently viewing நேட்டோ மீது சீறும் உக்ரைனிய அதிபர்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துமாறு நேட்டோவிடம் உக்ரைன் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், நேட்டோ அதற்கு உடன்படாத நிலையில் இப்போது உக்ரைன் அதிபர் “Volodymyr Zelenskyj” நோட்டோ மீது சீற்றமடைந்துள்ளார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுஉலையை ரஷ்யப்படைகள் நேற்று முற்றாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்த நிலையில், குறித்த அணுஉலைக்குள் ரஷ்யப்படைகள் எறிகணைகளை வீசியுள்ளதாகவும், அங்கு அணுக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்திருந்த உக்ரைனிய அதிபர், இதை தடுத்து நிறுத்த நேட்டோ உடனடியாக களமிறங்க வேண்டும் என நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கும் நேட்டோ செவிசாய்க்காத நிலையில், நேட்டோமீது விசனம் தெரிவித்து உக்ரைனிய அதிபர் கருத்துக்களை இன்று வெளியிட்டுள்ளார்.

உக்ரைன்மீது வான்வழித்தாக்குதல்களை ரஷ்யா மேற்கொள்வதை தடுக்குமுகமாக, உக்ரைனிய வான்பரப்பில் விமானப்பறப்புக்களுக்கு தடைவிதிக்குமாறு தான் விடுத்த வேண்டுகோளை நேட்டோ உதாசீனம் செய்துள்ளதன் மூலம், உக்ரைன்மீது ரஷ்யா வான்வழித்தாக்குதல்களை நடாத்துவதற்கு நேட்டோவே பச்சைக்கொடி காட்டியுள்ளதாக உக்ரைனிய அதிபர் இன்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

குகன் யோகராஜா
தமிழ்முரசத்திற்காக…
05.03.2022

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments