நோர்வேயில் கறுப்பு யூலை கவயீர்ப்புப்போராட்டம்!

You are currently viewing நோர்வேயில் கறுப்பு யூலை கவயீர்ப்புப்போராட்டம்!

கறுப்பு யூலை என்பது இலங்கையில் சிங்களவர்களால்  1983 சூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையாகும்

இப்படுகொலைகள் திட்டமிடப்பட்டு நடந்தேறியவை ஆகும்.

1983 சூலை 23 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னணியே இப்படுகொலைகளுக்குத் தூண்டுதலாக இருந்தது எனக் கூறப்படாலும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சிறில் மத்தியூ மற்றும் கட்சி உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு  சிங்களப் பொதுமக்கள் பங்கேற்புடன் தமிழருக்கு எதிரான வன்முறைகளாக மாறியது.

1983 சூலை 24 இரவு சிறீலங்கா தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது.

பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. ஏழு நாட்களில்இ முக்கியமாக சிங்களக் கும்பல் தமிழரைத் தாக்கினர்.

உயிருடன் எரித்தனர். படுகொலைகளைப் புரிந்தனர். உடமைகளைக் கொள்ளையடித்தனர்.

இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

ஏறத்தாழ 8000 வீடுகளும், 5000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன.

இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு  300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது.

பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரச-சார்பற்ற அமைப்பு 1983 திசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் இது ஒரு தமிழினப்படுகொலையென அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments