பணத்தினை பெற வங்கிக்கு சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

You are currently viewing பணத்தினை பெற வங்கிக்கு சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கோண்டாவில் வடக்கை சேர்ந்த ராமன் தர்மலிங்கம் (வயது 81) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கோண்டாவிலில் உள்ள தனது வீட்டில் இருந்து , திருநெல்வேலி பகுதியில் உள்ள மக்கள் வங்கி கிளையில் ஓய்வூதிய பணத்தினை எடுக்க சென்ற வேளை , வங்கியின் முன்பாக பலாலி வீதியை கடக்க முற்பட்ட வேளை , வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதி படுகாயமடைந்தார்.

அவரை அவ்விடத்தில் நின்றவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments