பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு: 2000 பலி !

You are currently viewing பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு: 2000 பலி !

breaking

 

பப்புவா நியூ கினியாவில் (New Guinea) ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 2000இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த அனர்த்தமானது, கடந்த வெள்ளிக்கிழமை (24) முங்காலோ மலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சுமார் 700இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை (UN) நேற்றைய தினம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மீட்பு பணியில் தற்போது 2000இற்கும் அதிகமானோர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த பகுதியில் தொடர்ந்தும் நிலம் சரிந்து கொண்டிருப்பதனாலும் நீர் வழிந்தோடிக் கொண்டிருப்பதனாலும் ஆபத்து அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 4000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,000இற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியிலிருந்து தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி, அப்பகுதியிலுள்ள உணவுத் தோட்டங்கள் மற்றும் நீர் விநியோகங்கள் ஆகியன முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments