பளை பகுதியில் நேற்று இரவு விபத்து 17 பேர் காயம ஒருவர் பலி!

You are currently viewing பளை பகுதியில் நேற்று இரவு விபத்து 17 பேர் காயம ஒருவர் பலி!

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, பளை பகுதியில் நேற்று இரவு விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்து, மாலை 6 மணியளவில் ஏ9 வீதியின் பளை முள்ளியடி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு புரண்டு விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் வரையில் காயமடைந்து, பளை பிரதேச வைத்தியசாலையிலும் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது, இரண்டு இ.போ.ச பேருந்துகள் போட்டி போட்டு வேகமாக பயணித்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக வீதியில் பயணித்தோர் தெரிவித்தனர்.

பளை பகுதியில் நேற்று இரவு விபத்து 17 பேர் காயம ஒருவர் பலி! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments