பாரிஸ் ஈபிள் கோபுரம் மீது ட்ரோன் தாக்குதல்: ஐ.எஸ் விடுத்த மிரட்டல்!

You are currently viewing பாரிஸ் ஈபிள் கோபுரம் மீது ட்ரோன் தாக்குதல்: ஐ.எஸ் விடுத்த மிரட்டல்!

பாரிஸ் ஒலிம்பிக் தொடர்பில் ஈபிள் கோபுரம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்படும் என்று ஐ.எஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. தீவிர இஸ்லாமியக் குழுவுடன் தொடர்புடைய ஒரு இணையதளத்தில் பிரெஞ்சு தலைநகரில் குண்டு வீசப் போவதாக வெளிப்படையான மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்புடைய தாக்குதல் குறித்து படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

மட்டுமின்றி அல்லாவின் விருப்பத்தின் பேரில் ஒலிம்பிக் போட்டிகள் முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். Lone Wolves எனப்படும் தனியொருவரால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களுக்கு அமைப்பு அல்லது தலைவரின் ஆதரவு அல்லது வழிகாட்டுதல் இருப்பதில்லை என்றே கூறப்படுகிறது.

நேரடியான தொடர்பில்லை என்ற போதும் சில தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றுக்கொள்வதுண்டு. 2016ல் ஆர்லாண்டோ துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்புடன் நேரடி தொடர்பு இல்லாத போதும் அந்த அமைப்பு பொறுப்பேற்றது.

குறித்த தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். தற்போது பாரிஸ் தாக்குதல் தொடர்பில் வெளியான காணொளியும், இதேப்போன்று ஐ.எஸ் தொடர்பான காணொளிகளை பகிரும் ஒரு தளத்தில் இருந்தே வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, உலகின் எந்த பகுதியில் ஐ.எஸ் தொடர்பில் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டாலும், இந்த தளத்தில் அந்த சம்பவம் தொடர்பில் தகவல் பதிவேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே, பிரான்ஸ் அதிகாரிகள் பாரிஸ் மற்றும் 17 நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments