பிரான்சு ஈழமுரசு பணியக முன்னாள் வரவேற்பாளர் சாவடைந்தார்!

You are currently viewing பிரான்சு ஈழமுரசு பணியக முன்னாள் வரவேற்பாளர் சாவடைந்தார்!

ஈழமுரசு பணியக முன்னாள் வரவேற்பாளர் திரு.வைத்தியான் சூசைப்பிள்ளை அவர்கள் இன்று 5ம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையில் சாவடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகரைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வாழ்விடமாகவும் கொண்டிருந்த சூசைப்பிள்ளை அவர்கள், ஈழமுரசு நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் காலத்தில் இருந்து ஈழமுரசு பணியகத்தில் நீண்ட காலமாக வரவேற்பாளராகப் பணியாற்றி பலரதும் நன்மதிப்பைப் பெற்றவர். அத்துடன், ஈழமுரசு விநியோகத்திலும் இவரது பங்களிப்பு அளப்பரியது.

சூசை அண்ணை என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட இவர், தனது முதுமைக் காலத்தை தாயகத்தில் கழித்துவந்த நிலையில் சாவைத் தழுவியுள்ளார்.

மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரராகத் திகழ்ந்த சூசைப்பிள்ளை அவர்கள், பிரான்சில் நடைபெற்ற ஈழத் தமிழ் அமைப்புக்களின் பல்வேறு கால்ப்பந்தாட்டப் போட்டிகளில் நடுவராகவும் பணியாற்றிய பெருமைக்கும் உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள