பிரான்சு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு வன்மையான கண்டனம்!

You are currently viewing பிரான்சு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு வன்மையான கண்டனம்!

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரான்ஸ் கிளையானது சிறீலங்கா இராணுவத்துடன் இணைந்து செயற்படத் தொடங்கியுள்ளது உலகத் தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

2009ம் ஆண்டுக்குப் பின்னர் பிரான்சில் இருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது பெரும் மர்மமாக இருந்துவரும் நிலையில், ஆண்டுதோறும் களியாட்ட நிகழ்வுகளை மட்டும் பிரான்சில் புனர்வாழ்வுக் கழகம் நடத்திவந்தது.  இந்நிலையில் தற்போது இனஅழிப்பில் ஈடுபட்ட சிறீலங்கா இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுவதை பிரான்ஸ் புனர்வாழ்வுக் கழகம் தாமே ஒத்துக்கொண்டு அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களுக்கு பொங்கல் பானை மற்றும் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம் கொறளைப்பற்று வடக்கு வாகரையில் கடந்த 10ம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறீலங்காவின் இனஅழிப்பு இராணுவத்தை மாலை மரியாதையுடன் அழைத்துவந்து பெரும் கௌரவத்தை அவர்களுக்கு வழங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரான்ஸ் கிளை, ஒன்றிணைந்து செயற்படப்போவதாகவும் சபதமெடுத்து தமது சமூக வலைத்தளத்தில் பதிவையும் வெளியிட்டுள்ளனர்

இந்த இழிநிலையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

3.3 3 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments