பிரான்ஸில் தமிழ் சிறுவன் சுட்டுக்கொலை!

You are currently viewing பிரான்ஸில் தமிழ் சிறுவன் சுட்டுக்கொலை!

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் 7 வயது மகனுக்கு நேர்ந்தது என்ன? விசாரணை வளையத்தில் தந்தை! பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் குடும்ப வன்முறை காரணமாக தந்தை ஒருவரால் 7 வயதான மகன் படுகொலை செய்ய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுளளது.

இந்த சம்பவம் பாரிஸின் புறநகர் பகுதியான செய்ன்-சன்-துனி மாவட்டத்திற்கு Villemomble பகுதியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்துக்கு சென்ற காவல்த்துறையினர் அங்குள்ள வீடு ஒன்றில் கெவின் என அழைக்கப்படும் ஏழு வயது சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சோபா இருக்கையில் சடலமாக கிடந்துள்ளதை அவதானித்துள்ளனர்.

தலையில் சுடப்பட்டு குறித்த சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவதினத்தன்று சிறுவனின் தாயார் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில், சிறுவனின் சடலத்தை கண்டு அதிர்ச்சியில் பொலிஸாரை அழைத்துள்ளார்.

இதையடுத்து விசாரணைகளை தொடர்ந்த அதிகாரிகள், வீட்டின் மற்றுமொரு அறையில் சிறுவனின் தந்தை தற்கொலைக்கு முயன்ற நிலையில் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டார். இந்நிலையில் 36 வயதுடைய சிறுவனின் தந்தை தற்போது தீவிர சிகிச்ச்சைப் பிரிவில் அனுமதிக்கபப்ட்டுள்ளார்.

குறித்த தந்தையே மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சிறுவனின் தந்தை இம்மாத ஆரம்பத்திலேயே சிறையில் இருந்து விடுதலையாகியிருந்தார்.

மனைவியுடனான குடும்ப தகராரின் முடிவிலேயே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் , இந்த தம்பதி ஒரே வீட்டில் வாழ்ந்த போது தொடர்ந்து தகராரில் ஈடுபடுவதாக அயலவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது .

மேலும் 7 வயதான குறித்த பாலகன் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments