கனடாவில் பிராம்ப்டன் நகரில், தமிழ் இன அழிப்பு நினைவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறித்து, கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடமிருந்து அறிக்கை ஒன்றை கோரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.
கனேடிய தமிழ் தேசிய கவுன்சில் உள்ளிட்ட கனடாவில் உள்ள தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் கட்டப்பட்ட இந்த தமிழ் இன அழிப்பு நினைவகம், தமிழீழ வரைபடத்தையும் உள்ளடக்கி நிறுவப்பட்டுள்ளது.